வாஷிங்டன்: ஈரானுக்கு ரஷ்யா உதவுவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறிய குற்றச்சாட்டு குறித்து அதிபர் புடினிடம் கேட்பேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மிச்சிகனில் நிருபர்களிடம் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதாவது: மீண்டும் இங்கு வந்திருப்பது பெருமைக்குரியது. எனக்கு இந்த இடம் மிகவும் பிடிக்கும், இது ஒரு அழகான மாநிலம். மிச்சிகனுக்கு மீண்டும் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
ஈரானுக்கு ரஷ்யா உதவுவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறிய குற்றச்சாட்டு குறித்து அதிபர் புடினிடம் கேட்பேன். அமெரிக்கா ஈரானை படுமோசமாக தாக்கி உள்ளது.
ரஷ்யாவின் உதவி ஏதேனும் இருந்த போதிலும் அந்த ஈரான் அரசு தோல்வி அடைந்து வருகிறது. ரஷ்யாவின் உதவியால் பெரிய தாக்கம் எதுவும் ஏற்படவில்லை. ஏனென்றால் நாங்கள் ஈரானை சின்னாபின்னமாக்கிவிட்டோம். ஈரானிடம் விமானப்படை, கடற்படை எதுவுமே இல்லை.
ரஷ்யா வெனிசுலாவுக்கு ஏராளமான உபகரணங்களை கொடுத்தது. அனைத்துமே ரஷ்ய உபகரணங்கள் தான் இருந்தன. அது எப்படி செயல்பட்டது. அவ்வளவு சிறப்பாக இல்லை. இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறினார்.
