போர் நிறுத்தம் பற்றி பேச சீனா – அமெரிக்காவுக்கு புடின் அழைப்பு: உக்ரைனுக்கு அழைப்பில்லை

மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் போர் நான்கரை ஆண்டுகளைக் கடந்தும் தொடர்கிறது. பல முயற்சி எடுத்தாலும் போர் முடிவுக்கு வரவில்லை. இரு தரப்பிலும் தொடர்ந்து பரஸ்பர தாக்குதல் நடத்தப்படுகிறது.

இந்நிலையில், உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து விவாதிக்க, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஜின்பிங்குடன் முத்தரப்பு பேச்சுக்கு தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய தொலைபேசி வழி உரையாடலின் போது புடின் இதை டிரம்பிடம் முன் வைத்துள்ளார். வரும், நவ., 18, 19 தேதிகளில் சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெற உள்ள ஆசிய – பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டின் போது, இச்சந்திப்பை நடத்தலாம் என புடின் தெரிவித்தாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அதே நேரத்தில், இந்த பேச்சுக்கு உக்ரைனை அழைக்கவில்லை.

Source link