போர் முழு வீச்சில் துவங்கியது; கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வு

நமது நிருபர்

அமெரிக்கா – ஈரான் போர் முழு வீச்சில் மீண்டும் தொடங்கியதை தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 92 டாலராக அதிகரித்துள்ளது.

சர்வதேச போர் பதற்றம் மற்றும் கச்சா எண்ணெய் வினியோகத்தில் தடை ஏற்படுமோ என்ற அச்சம் தணியாததால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

அமெரிக்கா – ஈரான் போர் முழு வீச்சில் மீண்டும் துவங்கியதை தொடர்ந்து,உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகம் மற்றும் சர்வதேச வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தூதரக பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ளதால் மோதல் மேலும் அதிகரிக்கும் சூழல் நிலவுகிறது.

இதன் எதிரொலியாக கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 92 டாலராக அதிகரித்துள்ளது. ஜூன் கடைசி வாரத்தில் இதன் விலை 75 டாலராக இருந்தது.

Source link