மகரிஷி வால்மீகி ஜெயந்தி: ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

புதுடில்லி: பிரதமர் மோடியின் வாழ்த்து; நாட்டு மக்கள் அனைவருக்கும் மகரிஷி வால்மீகி ஜெயந்தி நல்வாழ்த்துகள். இவரது உன்னதனமான சிந்தனைகள், நமது கலாசாரம், பாரம்பரியத்திற்கு அடித்தளமாக விளங்குகிறது. இவை ஒவ்வொரு காலத்திலும் நாட்டை வளர்க்கவும், செழிப்படையச் செய்யவும் உதவும்.

மகரிஷி வால்மீகியின் உயரிய சிந்தனைகளும், மனிதகுலத்திற்கான போதனைகளும் ஒவ்வொரு காலகட்டத்திலும் நாட்டின் வழிகாட்டி விளக்குகளாகத் தொடர்ந்து திகழும், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்ட வாழ்த்து; மகரிஷி வால்மீகியால் இயற்றப்பட்ட ராமாயணத்தின் மூலம் கடமை, சுயநலமற்ற சேவை, நட்பு, தியாகம், தர்மம், பக்தி ஆகிய உன்னத நெறிமுறைகள் மனித வாழ்க்கைக்கு வழிகாட்டுகின்றன.

ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உயரிய கருத்துக்களையும் லட்சியங்களையும் ஏற்றுக்கொண்டு, மக்கள் அனைவரும் தங்களது தனிப்பட்ட, சமூக வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் பயணிக்க வேண்டும், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Source link