முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் இன்று (29-10-26) காலை 10 மணியளவில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தவெக, காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த தமிழக அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், அரசின் நிலத் திட்டங்கள், நிர்வாக ரீதியிலான முடிவுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்த கூட்டத்தில் அமைச்சர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களையும் உத்தரவுகளையும் முதல்வர் விஜய் வழங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, மக்களின் தேவையறிந்து அமைச்சர்கள் செயல்பட வேண்டும் என்றும், சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட மக்களின் அடிப்படை தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து செயல்பட வேண்டும் என்றும் முதல்வர் விஜய் அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து சமூக நீதி கணக்கெடுப்பு தொடர்பாக ஆணையம் அமைக்க இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. கல்வி, வேலைவாய்ப்பில் ஒவ்வொரு சமூகத்தினரின் சமூக, பொருளாதார நிலையை ஆய்வு செய்ய ஏற்கெனவே மத்திய அரசு கணக்கெடுப்பு நடத்தி வருகிறது. இந்த சூழலில் சமூக நீதி கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக ஆணையம் அமைக்க தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
