மக்களின் பாதுகாப்போடு விளையாடுவதை தவெக அரசு நிறுத்த வேண்டும் – கனிமொழி எம்.பி. – tvk government must stop playing with the safety of the people says dmk mp kanimozhi

திருவைகுண்டம் அருகே கல்லூரி மாணவர் இசக்கி ராஜா வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக திமுக எம்.பி. கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார். சாத்தான்குளம் கொலைச் சம்பவத்தின் ரத்தம் காய்வதற்குள் தூத்துக்குடியில் அடுத்தப் படுகொலை நடந்திருப்பதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த வாரத்தில் 5 படுகொலைகளுக்கு மேல் தூத்துக்குடியில் நடந்துள்ளன. அரிவாள் வெட்டு, சிறுமிகள் கடத்தல் என நாளுக்கு நாள் சட்டம்-ஒழுங்கு சீரழிவதாக கனிமொழி எம்.பி. வேதனை தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் புழக்கம் மற்றும் விலைவாசி உயர்வு

தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதுடன், விலைவாசி உயர்வு மற்றும் மின்வெட்டு போன்ற பிரச்சினைகளால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன. காவல்துறை முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்தும், குற்றங்களைத் தடுக்க அரசு தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், சமூக வலைதளங்களில் மட்டும் தவெக அரசு ஆட்சி நடத்துவதாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடியுள்ளன.

வீடு புகுந்து பெண் என்றும் பாராமல் வெட்டியுள்ளனர்

முதலமைச்சருக்கு சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்த திறமையும் இல்லை, அக்கறையும் இல்லை என சாத்தான்குளம் கொலை விவகாரத்திலேயே கனிமொழி எம்.பி. காட்டமாக விமர்சித்து இருந்தார். பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, குழந்தைகள் தாக்கப்படும் நிலை தொடர்ந்து நடந்து வருகிறது.

பெண்கள் வாழ்வதே கேள்விக்குறியான நிலை உள்ளது. அச்சத்தோடு பெண்கள் வாழும் நிலை உள்ளது. தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. வீடு புகுந்து பெண் என்றும் பாராமல் வெட்டக்கூடிய துணிச்சல் மிகுந்த சம்பவம் நடந்துள்ளது.

Source link