அமித்ஷா குறித்து 2018-ல் சர்ச்சை பேச்சு: அவதூறு வழக்கில் ராகுல் காந்தி விடுவிப்பு: கோர்ட் தீர்ப்பு

அமித்ஷா குறித்து 2018-ம் ஆண்டு பேச்சு தொடர்பான அவதூறு வழக்கில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை உத்தரப் பிரதேசத்தின் சுல்தான்பூர் நீதிமன்றம் திங்கள்கிழமை விடுதலை செய்தது.

ஆங்கிலத்தில் படிக்க:

அப்போதைய பா.ஜ.க தேசிய தலைவராக இருந்த அமித்ஷாவுக்கு எதிராக அவதூறான கருத்துக்களைத் தெரிவித்ததாகக் கூறி, உள்ளூர் பா.ஜ.க தலைவர் விஜய் மிஸ்ரா என்பவரால் இந்த வழக்குத் தொடரப்பட்டது.

கடந்த பிப்ரவரி மாதம் சுல்தான்பூரில் உள்ள எம்.பி – எம்.எல்.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி, இந்த குற்றச்சாட்டுகளை மறுத்ததோடு, தன் மீதான புகார் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் தெரிவித்தார். அவரது வழக்கறிஞர் காசி பிரசாத் சுக்லாவும் இந்த வழக்கு அடிப்படையற்றது என்று வாதிட்டு, வழக்கை தள்ளுபடி செய்யக் கோரியிருந்தார்.

இதையடுத்து, அமித்ஷா குறித்து 2018-ம் ஆண்டு பேச்சு தொடர்பான அவதூறு வழக்கில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை உத்தரப் பிரதேசத்தின் சுல்தான்பூர் நீதிமன்றம் திங்கள்கிழமை விடுதலை செய்தது.

மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு கருத்து தெரிவித்ததாகத் தொடரப்பட்ட அவதூறு வழக்கில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சுல்தான்பூர் நீதிமன்றம் திங்கள்கிழமை விடுவித்துத் தீர்ப்பளித்துள்ளது.

Source link