மதுராந்தகம் இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றி வாய்ப்பு எப்படி? வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின் பரந்தாமன் சொன்ன வார்த்தை – paranthamen says on the dmk chances of victory in the madurantakam by election

எழும்பூர் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான பரந்தாமன், திமுக மீது தவெக அரசு முன்வைக்கும் விமர்சனங்களுக்கு காட்டமாக பதிலடி கொடுத்து வருகிறார். அவருடைய பேச்சுக்கள் இணைய திமுகவினர் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் பரந்தாமனுக்கு மதுராந்தகம் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் திமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்தான அறிவிப்பினை அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதன்படி, மதுராந்தகம் தொகுதியில் திமுக சட்டத்துறை இணை செயலாளர் பரந்தாமன் களமிறங்குகிறார். இந்நிலையில் வேட்பாளாராக அறிவிக்கப்பட்டதற்கு பின்பாக செய்தியாளர்களை சந்தித்த பரந்தாமன், மதுராந்தகத்தில் 100 சதவிகிதம் வெற்றி வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Source link