மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: திமுக புறக்கணிக்கிறதா? வெற்றி வியூகம் குறித்து ஆலோசனை – dmk plan for madurantakam dharapuram election candidates and victory strategy

இரண்டு தொகுதி இடைத்தேர்தல் விவகாரம் தமிழக அரசியலில் மீண்டும் அனலை கிளப்பியுள்ளது. இந்த சூழலில் இடைத்தேர்தலில் திமுகவின் வியூகம் என்னவென்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தேர்தலை புறக்கணித்தால் எப்படியான விளைவுகள் ஏற்படும் என்பது பற்றியும் ஆலோசனை செய்து வருகின்றனர்.

சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியுள்ளது. இதில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்படுகிறது. இதற்கிடையில் இடைத்தேர்தலை புறக்கணித்தால் என்ன நடக்கும்? என்ற பார்வையில் ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இது திமுகவிற்கு அரசியல் ரீதியாக பின்னடைவாக மாறும் என்பதால் புறக்கணிக்க வாய்ப்புகள் குறைவு என்கின்றனர்.

Source link