20 லட்சம் மக்கள் தொகை இல்லாமல் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு அனுமதி அளிக்க முடியாது எனக் கூறி கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான தமிழ்நாடு அரசின் திட்ட அறிக்கையை மத்திய அரசு கடந்த நவம்பர் மாதம் திருப்பி அனுப்பியது. அதில், கோவையில் 15.84 லட்சம், மதுரையில் 15 லட்சம் மட்டுமே மக்கள் தொகை இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இதனையடுத்து கடந்த மே மாதம் தமிழக அரசு, கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கக் கோரி பரிந்துரையை அனுப்பியிருந்தது. இந்நிலையில், ‘மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தும் அளவுக்கு மக்கள் தொகை இல்லை. எனவே இந்த திட்டத்திற்கு அனுமதி அளிக்க முடியாது’ என மத்திய அரசின் வீட்டு வசதித்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
அதோடு, இந்த இரு நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் அமைவதால் பயண நேரம் குறைய வாய்ப்பில்லை. அப்பகுதிகளில் கூடுதல் பேருந்துகளை இயக்குமாறு தமிழக அரசிற்கு, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
