மத்திய அரசு அறிமுகம் செய்த Face Wash வெறும் ரூ.47 மட்டுமே; எவற்றுக்குப் பயன்படுத்தலாம் தெரியுமா?

மாறி வரும் உலகில் எப்போதுமே அனைவரும் மிக முக்கியத்துவம் தரும் ஒன்று – ‘ஆரோக்கியமான முகப் பராமரிப்பு’.

ஆனால், சந்தையில் விற்கும் பெரும்பாலான பராமரிப்புப் பொருள்களின் விலை அதிகமாக இருப்பதால் சாமானிய மக்களால் அந்தப் பொருள்களை வாங்கிப் பயன்படுத்த முடிவதில்லை.

இந்த நேரத்தில் இந்தியாவின் சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பில் பெரும்பாலான மக்களின் வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு பிரதான் மந்திரி பாரதிய ஜன்ஒளஷதி பரியோஜனா (PMBJP) திட்டத்தின் கீழ் மத்திய அரசு சாலிசிலிக் அமிலம் ஃபேஸ் வாஷ் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது.

தயாரிப்பு விவரங்கள் மற்றும் விலை

– 1% சாலிசிலிக் அமிலம் ₹ 46.88. இது மேலோட்டமான முகப் பிரச்னைகளை அதாவது முகப்பருக்கள், கரும்புள்ளிகள் ஆகியவற்றைத் தீர்க்கும் எனவும்,

– 2% சாலி சிலிக் அமிலம் ₹65.63. இது சருமத்தில் ஆழமாகச் சென்று முகத்தில் இருக்கும் பிரச்னைகளை அதாவது முகப்பருக்கள் போன்றவற்றை தீர்க்கும் எனவும் உறுதியளித்துள்ளனர்.

1% சாலிசிலிக் அமிலம் – 2% சாலி சிலிக் அமிலம்

மேலும் இதில் இருக்கும்

– பீட்டா-ஹைட்ராக்ஸி அமிலம் (BHA): சாலிசிலிக் அமிலம் என்பது எண்ணெய்யில் கரையக்கூடிய ஒரு BHA ஆகும். இது தோலின் மேல்பகுதியோடு நிற்காமல், எண்ணெய் சுரப்பிகள் மற்றும் துளைகளின் ஆழம் வரை ஊடுருவுகிறது.

– ஆழமான சுத்தம் (Deep Cleansing): முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளை உருவாக்கும் இறந்த செல்கள் மற்றும் அதிகப்படியான செபம் (Sebum) எனப்படும் முக எண்ணெய்யைக் கரைத்து வெளியேற்றுகிறது.

– பருக்கள் வராமல் தடுத்தல்: தோலின் துளைகளைச் சுத்தமாக வைத்திருப்பதன் மூலம், முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்கள் வளர்வதைத் தடுக்கிறது.

இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம்

இது மத்திய ரசாயன மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய மருந்துகள் மற்றும் மகத்துவ உபகரணங்கள் பணியகம் (PMPI) இதனைச் செயல்படுத்துகின்றனர்.

எனவே

– அனைவருக்கும் தோல் பராமரிப்பு: விலையுயர்ந்த மருத்துவத் தர தோல் பராமரிப்புப் பொருட்களை வாங்க முடியாத மாணவர்கள் மற்றும் நடுத்தரக் குடும்பத்தினருக்கு இது மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறது.

– உத்தரவாதமான தரம்: உலக சுகாதார அமைப்பின் (WHO-GMP) தரச்சான்றிதழ் பெற்ற ஆலைகளில் தயாரிக்கப்பட்டு, ஆய்வகங்களில் (NABL) பரிசோதிக்கப்பட்ட பிறகே விற்பனைக்கு வருகிறது.

Face Wash
Face Wash

– திட்ட விரிவாக்கம்: ஜன் ஔஷதி திட்டம் என்பது வெறும் உயிர் காக்கும் மருந்துகள் மட்டுமல்லாமல், தனிநபர் பராமரிப்பு மற்றும் தோல் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கிறது என்பதை இது காட்டுகிறது.

எங்கு வாங்கலாம்?

உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஜனஅவஷதி கேந்திரா (Jan Aushadhi Kendra) அல்லது அருகில் இருக்கும் மக்களக மருந்தகங்களில் இதனை நேரடியாகப் பெற்றுக்கொள்ளலாம்.

Source link