மனிதனுக்கு ஒரே வாழ்க்கை தான்; இரட்டை ஆயுள் முரண்பாடானது: சுப்ரீம் கோர்ட் கருத்து

– சிறப்பு நிருபர் –

மஹாராஷ்டிராவில், கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை குற்றத்திற்காக கைதான நபருக்கு விசாரணை நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்தது. இந்த தண்டனையை அடுத்தடுத்து அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. மும்பை உயர் நீதிமன்றமும் இந்த தீர்ப்பை உறுதி செய்தது.

உச்ச நீதிமன்றத்தில் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. இம்மனுவை நீதிபதிகள் கே.வி.விஸ்வநாதன், அருண் பள்ளி அமர்வு விரிவாக விசாரித்து வந்த நிலையில், நேற்று தீர்ப்பளித்தது.

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மனிதர்களுக்கு இருப்பது ஒரே வாழ்க்கை தான். அந்த வகையில் ஒரு குற்றவாளி இரண்டு முறை ஆயுள் தண்டனை அனுபவிக்க வேண்டும் என, தண்டனை விதிப்பது முரண்பாடானது; பகுத்தறிவற்றது.

இருவேறு குற்றங்களுக்காக விதிக்கப்படும் ஆயுள் தண்டனைகளை அடுத்தடுத்து அனுபவிக்க முடியாது. எனினும் இருவேறு வழக்குகளையும் பொருத்தி பார்க்க வேண்டும். இதன் மூலம், ஒரு குற்றத்திற்காக வழங்கப்படும் தண்டனை குறைப்பு, மற்றொரு குற்றத்திற்காக விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையின் தாக்கத்தை நிச்சயம் குறைத்துவிடாது. எனவே, உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Source link