“மன நிம்மதியுடன் சாமி தரிசனம் கூடச் செய்ய முடியவில்லை” – மின்வெட்டு குறித்து இ.பி.எஸ். பேட்டி!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்வதற்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (29.10.2026) சென்றிருந்தார். இந்நிலையில், கோயில் முழுவதும் திடீரென மின்தடை ஏற்பட்டது.  இதனால் அந்தப் பகுதியில் இருந்த கோயில் விளக்குகள் அனைத்தும் அணைந்துவிட்டன. எனவே கோயில் வளாகம் முழுவதும் இருள் சூழ்ந்து காணப்பட்டது. 

அதன்பிறகு ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதன்படி சில நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் மின்சாரம் வழங்கு பணி தொடங்கியது. பக்தர்களின் சிரமத்தைப் போக்கும் வகையில் ஜெனரேட்டர் மூலம் மின் விநியோகம் செய்யப்பட்டதாகக் கோவில் இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், “மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தபோதே திடீரென மின்வெட்டு ஏற்பட்டது. தமிழகத்தில் நிகழும் மின்வெட்டுக்கு இதுவே சான்று. இதனை மக்கள் இதனைப் பார்த்துக் கொண்டால் சரி; மதுரை மீனாட்சி அம்மனைப் பார்த்தால் சரி. இந்த ஆட்சியில் பக்தர்களால் மன நிம்மதியுடன் கூட சாமி தரிசனம் செய்ய முடியவில்லை. மக்களால் நிம்மதியாக வாழ முடியாது. நிம்மதியாக இறைவனைப் பிரார்த்தனை செய்யக்கூட முடியாது” எனத் தெரிவித்தார்.