மரணத்தைப் பற்றி பேசிய பாதிரியார்; அடுத்த நொடியே சிலுவை சரிந்து உயிரிழந்த சோகம்!

தேவாலயத்தில் சிலுவை சரிந்து போதகர் மீது விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென் அமெரிக்க நாடான ஈக்வடார் நாட்டின் குவாயாகில் பகுதியில், தேவாலயம் ஒன்று உள்ளது. இந்த தேவாலயத்தின் பாதிரியாராக பணியாற்றி வந்த பேட்ரிசியோ சான்செஸ் (53) என்பவர் நேற்று (18-10-26) மக்களுக்கு திருவழிபாட்டு நிகழ்வை நடத்திக் கொண்டிருண்டார்.

திருப்பீடத்திற்கு அருகில் நின்று கொண்டு மக்களிடம் உரையாற்றிக் கொண்டிருந்த போது, பின்னால் சுவரில் பொருத்தப்பட்டிருந்த சிலுவை, திடீரென சரிந்து பாதிரியார் பேட்ரிசியோ தலை மற்றும் முதுகின் மீது பலமாக விழுந்தது. அங்கிருந்தவர்கள் உடனடியாக ஓடிவந்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துவிட்டதாகத் மருத்துவகள் தெரிவித்தனர்.

“ஒரு நாள், இங்கே இருக்கும் நாம் அனைவருமே இறந்துவிடுவோம்..” எனக் குறிப்பிட்டு பேசி, தனது போதனையை நிறைவு செய்தபோது, அவர் மீது சிலுவை சரிந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.