மலையாள தமிழ் வரவு வென்றதா? – பாலன் தி பாய் விமர்சனம்

பாலன் (தி பாய்) – விமர்சனம்

மலையாளத்தில் ஜானி மன் மற்றும் மஞ்சுவல் பாய்ஸ் படத்தில் இயக்கிய சிதம்பரம் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் திரைப்படம் இந்த பாலன். சமீபத்தில் வெளியான மஞ்சுவல் பாய்ஸ் மொழிகள் கடந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதுபோன்ற ஒரு வெற்றியை எதிர்நோக்கி உருவாகி இருக்கும் இந்த பாலன் திரைப்படம் அதை பூர்த்தி செய்ததா, இல்லையா?

சிறுவயதிலேயே கணவனை இழந்த பர்சானா தன் ஆதிசேஷன் மகனுடன் ஜெயிலில் இருக்கிறார். ஜெயிலில் இருந்து ஒரு விபச்சாரியின் உதவியோடு வெளியே வரும் அவர் தனது அடையாளங்களை மாற்றி மாற்றி கூறி கிடைத்த இடங்களில் எல்லாம் வேலை செய்து பிள்ளையை வளர்க்கிறார். ஒரு கட்டத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் ஒரு வீட்டில் வயதான பாட்டியை பராமரிக்கும் வேலையை பெரும் அவர் அந்த வீட்டில் நன்றாக வேலை செய்து வருகிறார். அந்த சமயம் அந்த பாட்டி இறந்துவிட கூடவே ஜெயிலில் இருந்த விபச்சார பெண் அதே சமயம் வெளியே வந்து பர்சானாவை விபச்சாரத்திற்குள் இழுக்க இதையெல்லாம் சமாளிக்க நாயகி பர்சானா ஒரு விபரீத முடிவு எடுக்கிறார். அந்த விபரீத முடிவு பர்சானாவையும் அவரது மகனையும் பிரிக்கிறது. அந்த விபரீத முடிவு என்ன? அதை செய்தது யார்? தன் மகனுடன் பர்சானா மீண்டும் சேர்ந்தாரா, இல்லையா? என்பதே இப்படத்தின் மீதி கதை.

தாய் மகன் பாசத்தை வைத்துக்கொண்டு அதன் மூலம் ஒரு திரில்லர் கலந்த மர்டர் மிஸ்டரி படத்தை மலையாள சினிமாவிற்கு உரித்தான பாணியில் சிறப்பான முறையில் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் சிதம்பரம். படம் ஆரம்பித்து வழக்கம் போல் மெதுவாக நகர்ந்து ஸ்டேஜிங்குக்கு சில பல நேரங்கள் எடுத்துக்கொண்டு பின் கதைக்குள் செல்லும் திரைப்படம் போகப்போக விறுவிறுப்பாகவும் மாறி பார்ப்பவர்களை சீட்டின் நுனிக்கு வர வைத்து இறுதி கட்டத்தில் யாரும் எதிர்பாராத ஒரு எதிர்பார்த்த டுஸ்டை வைத்து படம் முடிந்து ரசிக்க வைத்திருக்கிறது. படம் முழுவதும் நான் லீனியர் திரைக்கதையில் படத்தை உருவாக்கி இருக்கும் இயக்குனர் அதை சிறப்பான முறையில் அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும்படி கொடுத்திருப்பது படத்திற்கு பிளஸ். குறிப்பாக மலையாள பட ரசிகர்களுக்கும் மட்டுமல்லாது அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும்படி அமைந்திருப்பதும் கூடுதல் சிறப்பு.

படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் அனைவருமே பெரும்பாலும் மலையாள நடிகர்களாகவே இருப்பது இங்கு பலருக்கு பரீட்சையும் இல்லாமல் இருந்தாலும் ஒவ்வொரு காட்சியும் ஒவ்வொரு கதாபாத்திரமும் சிறப்பான முறையில் நடித்து அந்த கதாபாத்திரத்திற்கு வழக்கம் போல் உயிர் பூட்டி இருக்கின்றனர். எந்த ஒரு இடத்திலும் எவரது நடிப்பிலும் தொய்வு என்பதே இல்லாமல் சிறப்பான முறையில் நடிப்பை வெளிப்படுத்தி கவர்ந்திருக்கின்றனர். இவர்களது நேர்த்தியான நடிப்பு படத்தை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்று வெற்றி பெற செய்திருக்கிறது. கூடவே தாய் மகன் பாசத்தையும் சிறப்பான முறையில் காண்பித்து அதே போல் தந்தை மகன் போலி பாசத்தையும் நேர்த்தியான முறையில் காண்பித்து படத்துடன் நம்மை ஒன்றை வைத்து இருக்கிறார் இயக்குனர் சிதம்பரம்.

படத்தின் நாயகி பர்சானா தாயாக வந்து தன் கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்து இருக்கிறார். எதார்த்தமான நடிப்பு படத்திற்கு சிறப்பு. கேட்ட போலீஸ் எஸ் ஐ ஆக வரும் நடிகர் சிறப்பான முறையில் நடித்து கைதட்டல் பெற்று இருக்கிறார். இவரது நேர்த்தியான வில்லத்தனம் சிறப்பாக அமைந்திருக்கிறது. பாலன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நாயகன் ஆதிசேஷன் சிறுவயது கதாபாத்திரமும் சரி சற்றே வளர்ந்த கதாபாத்திரமும் சரி சிறப்பான முறையில் நடித்து கவனம் பெற்று இருக்கிறார். இவருடன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் டொய்னோ தாமஸ் பொய் அப்பாவாக நடித்து அவரை ஏமாற்றும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். இவர்களது கெமிஸ்ட்ரி படத்தில் நன்றாக ஒர்க்அவுட் ஆகியிருக்கிறது. மற்றபடி படத்தில் நிறைய மலையாள நடிகர்களின் நடித்திருப்பது பரீட்சைம் இல்லாமல் இருப்பதாலும் அதே சமயம் நடித்து அனைத்து நடிகர்களுமே அவரவர் வேலையை சிறப்பாக நடித்து கதைக்கும் படத்திற்கும் நன்றாக வலு சேர்த்து விட்டு சென்று இருக்கின்றனர்.

சைஜூ காலித் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக நேர்த்தியாகவும் படம் பிடிக்கப்பட்டு இருப்பது படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. சுசின் ஷியாம் இசையமைப்பில் பாடல்களை காட்டிலும் பின்னணி இசை மிக மிக சிறப்பாக அமைந்து படத்திற்கு இன்னொரு நாயகனாக மாறியிருக்கிறது.

முந்தைய படத்தில் நட்பின் பெருமையையும் பாசத்தையும் சொன்ன இயக்குனர் சிதம்பரம் இந்த படத்தில் தாய் மகன் பாசத்தை வைத்துக்கொண்டு அதன் மூலம் சிறப்பான ஒரு திரில்லர் படத்தைக் கொடுத்து சீட்டின் நுனிக்கு வர வைக்கும்படி சிறப்பான தரமான ரசிக்கும்படியான படமாக இந்த பாலன் படத்தை கொடுத்து படத்தையும் கரைசேர்த்து இருக்கிறார்.

பாலன் – சுட்டி பையன்!

Source link