மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் கிடைத்த வெற்றி; போராட்ட களத்தில் உற்சாகம்

இளைஞர்களின் தொடர் போராட்டத்தின் எதிரொலியாகக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்,  தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து, நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இது இளைஞர்களின் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி என் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில், மாணவர்களும் இளைஞர்களும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். 

இது குறித்து, டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும்  கரப்பான் பூச்சி கட்சியினர் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இது குறித்து அவர்கள் பேசுகையில், ஒரு முக்கிய கோரிக்கை நிறைவேறி உள்ளது.  இளைஞர்களின் சக்தி என்ன? என்பதை உணர்ந்துள்ளோம். இது மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் கிடைத்த வெற்றி. இது தான் ஜனநாயகம். இது தான் ஆரம்பம் தான்” என்று தெரிவித்தனர்.  

தொடர்ந்து பேசிய அவர்கள், “ போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்கள் மீது வன்முறை நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுத்துவிடுக. நீட் தேர்வால் உயிர் இழந்த மாணவர்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்குக” என்ற கோரிக்கைகளையும் வலியுறுத்தி வருகின்றனர். 

இதனிடையே, விரைவில் ஒன்றிய அரசு போராட்டகாரகளுடன் பேச்சு வார்த்தை நடத்த உள்ளது. இந்த கோரிக்கைகளும் அரசால் ஏற்றக்கொள்ளப்படும் நிலையில் இருப்பதாகவே கூறப்படுகிறது. இருப்பினும், பேச்சு வார்த்தை முடிந்த பிறகே முழுமையான தகவல்கள் வெளியாகும். இருப்பினும், தற்போது அமைச்சரின் ராஜினாமாவைத் தொடர்ந்து டெல்லி ஜந்தர் மந்தரில் உள்ள இளைஞ்சர்கள் உற்சாகமாக முழக்கமிட்டு வருகின்றனர். 

Source link