“மாணவர்களுடைய குரல்கள் கண்ணியமாக கேட்கப்பட வேண்டும்”

நீட் விவகாரம் நாடு முழுவதும் பெரும் விவாதங்களையும், போராட்டங்களையும் தூண்டியுள்ளது. குறிப்பாக டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் முன்னெடுத்த அமைதி போராட்டமும் அவர்களை வன்முறையால் கையாண்ட காவல் துறையினரின் நடவடிக்கையும் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. டெல்லியில் தொடங்கிய போராட்டம் தற்போது நாடு முழுவதும் பரவி பல்வேறு மாநிலங்களில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நீட் தேர்வை ரத்து செய்யவும் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமெனவும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.  

நாளுக்கு நாள் போராட்டம் விரிவடைந்து வரும் நிலையில் அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்டோர் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். திரைபிரபலங்களில் சமூக வலைதளம் வாயிலாக இயக்குநர் பா.ரஞ்சித், வரலட்சுமி சரத்குமார், லெனின் பாரதி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட ஏகப்பட்ட பேர் ஆதரவு பதிவு பகிர்ந்திருந்தனர். இதைத் தவிர்த்து பிரகாஷ் ராஜ் நேரடியாக டெல்லியில் நடக்கும் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தார். இதே போல் சென்னையில் நடந்த ஆர்பாட்டத்தில் இயக்குநர்கள் வெற்றிமாறன், பா.ரஞ்சித், அமீர் நடிகைகள் ரேவதி, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர். 

இந்த நிலையில் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் சௌந்தர்யா ரஜினிகாந்த் மாணவர்களுடன் நிற்பதாக தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார். எக்ஸ் பக்கம் மூலம் ஆதரவு தெரிவித்த அவர், “இந்திய மாணவர்களுடன் ஒற்றுமையுடன் நாம் நிற்போம். மாணவர்களே நமது எதிர்காலம். அவர்களின் குரல்கள் அனுதாபத்துடனும் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் கேட்கப்பட வேண்டும். நம்பிக்கை, நேர்மை மற்றும் நியாயமான கல்வி முறை ஒவ்வொரு மாணவருக்கும் கிடைக்க வேண்டும். அத்தகைய எதிர்காலத்தை உருவாக்கத் தொடர்ந்து பாடுபடுவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார். 



Source link