மாவட்ட தேர்தல் அதிகாரி தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் வெளிநடப்பு

சென்னை: மாவட்ட தேர்​தல் அலு​வல​கம் சார்​பில், வாக்​காளர் பட்​டியல் திருத்​தம் குறித்து சென்னை ரிப்​பன் மாளி​கை​யில் நேற்று நடை​பெற்ற ஆலோ​சனைக் கூட்​டத்​தி​லிருந்து திமுக, காங்​கிரஸ், இடதுசா​ரிக் கட்​சிகள் வெளிநடப்பு செய்​தன.

சென்னை மாவட்​டத்​தில், வரும் ஜன.1-ம் தேதி தகுதி நாளாக கொண்டு, வாக்​காளர் பட்​டியல்​களின் சிறப்​புத் திருத்​தம் மற்​றும் வாக்​குச்​சாவடிகளை சீரமைத்​தல் தொடர்​பாக அங்​கீகரிக்​கப்​பட்ட அனைத்து அரசி​யல் கட்​சிகளின் பிரதி​நி​தி​களு​டனான ஆலோ​சனைக் கூட்​டம் ரிப்​பன் மாளி​கை​யில் நேற்று நடை​பெற்​றது.

மாவட்​டத் தேர்​தல் அதி​காரி சமீரன் தலை​மையில் நடை​பெற்ற கூட்​டத்​தில் வாக்​குச்​சாவடிகள் மறுசீரமைப்பு தொடர்​பாக, வாக்​குச்​சாவடிகளைப் பிரித்​தல், வாக்​குச்​சாவடிகளை இட​மாற்​றம் செய்​தல், வாக்​குச்​சாவடி பெயர் மாற்​றம் மற்​றும் வாக்​குச்​சாவடிகளை ஒருங்​கிணைத்​தல் குறித்​தும், வாக்​காளர் பட்​டியல் திருத்​தப் பணிகளை வாக்​குச்​சாவடி நிலை அலு​வலருடன் அரசி​யல் கட்​சிகள் இணைந்து பணி​யாற்ற ஒவ்​வொரு வாக்​குச்​சாவடிகளுக்​கும் நிலை முகவர்​களை நியமித்​தல் குறித்து விவாதிக்​கப்​பட்​டது. சென்னை மாவட்​டத்​தில் உள்ள 4079 வாக்​குச்​சாவடிகளை, 4071 ஆக குறைப்​பது குறித்​தும் ஆலோ​சிக்​கப்​பட்​டது.

இக்​கூட்​டத்​தில் திமுக, காங்​கிரஸ், இடதுசா​ரிக் கட்​சிகள், எஸ்ஐஆரை ரத்து செய்ய வேண்​டும் என்​றும், தலைமை தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்​டும் என வலியுறுத்தி வெளிநடப்பு செய்​தன.

திமுக வழக்​கறிஞர் சந்​துரு செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, தமிழகத்​தில் அவசரகதி​யில் எஸ்ஐஆர் அமல்​படுத்​தப்​பட்​டது. திமுக​வின் கோரிக்​கைக்கு செவி சாய்க்​காமல் சென்​னை​யில் 14 லட்​சம் வாக்​காளர்​கள் நீக்​கப்​பட்​டனர். சென்​னை​யில் திமுக தோல்​விக்கு எஸ்ஐஆர் தான் காரணம். மின்​னணு வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள் மீது நம்​பிக்கை இல்லை” என்​றார்.

Source link