ஈரோடு ராஜாஜிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவம். இவரது மனைவி ராணி பரமேஸ்வரி (56) இருவரும் இன்று காலை வேலை விஷயமாக வீட்டைப் பூட்டி விட்டு வெளியே சென்று விட்டனர்.
இந்நிலையில் இன்று காலை திடீரென அவரது வீட்டிலிருந்து புகை வெளியே வந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு ஈரோடு தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரம் போராடி தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் வீட்டிலிருந்த விறகுகள் சில பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன. வீட்டில் விறகு அடுப்பு பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
