சென்னை: தமிழக அரசு பெண் பணியாளர்களுக்கு, முதலாவது மற்றும் இரண்டாவது குழந்தைகளுக்கு தலா, 12 மாதங்கள் முழு சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது. மூன்றாவது குழந்தைக்கு, 12 வாரங்கள் விடுப்பு வழங்க அனுமதித்துள்ளது.
இந்த ஆணையை மின் வாரியத்திலும் அமல்படுத்தி, இந்தாண்டு மார்ச் 13 முதல், இந்த உத்தரவு அமலுக்கு வருவதாக, மின் வாரிய தலைவர் அருண் ராய் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
