மின் கட்டண உயர்வு மறுஆய்வு: அரசின் அறிவிப்பு வெறும் ‘கண் துடைப்பு’ நாடகமா? பொதுமக்கள் கொந்தளிப்பு! – electricity tariff hike new monitoring procedure causing distress to the public

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TNPDCL / TANGEDCO) அண்மையில் மின்சாரக் கட்டணச் சீட்டுகளில் ஏற்படும் தவறுகளைச் சரிசெய்வதற்காகப் புதிய கண்காணிப்பு நடைமுறையை அறிவித்தது. மின்சாரப் பயன்பாட்டு அளவீடுகளில் மனிதத் தவறுகள் மற்றும் தொழில்நுட்பக் கோளாறுகளைக் களைவதே இதன் நோக்கம் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், கள நிலவரத்தில் இது வெறும் அறிவிப்பாக மட்டுமே உள்ளது என்றும், தங்களுக்கு எந்தவித நன்மையும் கிடைக்கவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

TNPDCL அறிவித்த புதிய கண்காணிப்பு திட்டம்

மின் வாரியம் வெளியிட்ட முதற்கட்ட அறிவிப்பின்படி, ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாத சுழற்சியில் 500 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்திய வீட்டின் நுகர்வோர்கள் தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்படுவார்கள் என்று கூறப்பட்டது.

அதன்படி, முந்தைய ஜூலை, ஆகஸ்ட் மாதக் கட்டணத்தை விட செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் 20%-க்கும் அதிகமாக மின் கட்டணம் உயர்ந்திருந்தால், அந்தப் பட்டியல் மென்பொருள் அமைப்பால் தானாகவே தடுக்கும் வகையில் முடக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இவ்வாறு நிறுத்தப்படும் கட்டண ரசீதுகள் அதிகாரிகளின் மறு பரிசீலனைக்குப் பிறகே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதிகாரிகளின் ஆய்வும் தொடரும் மின் கட்டண அதிர்ச்சியும்

முறைகேடுகளையும் பிழைகளையும் தவிர்க்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டு ஆய்வுகள் நடத்தப்படுவதாக மின் வாரியம் தரப்பில் கூறப்பட்டாலும், நுகர்வோருக்குத் தீர்வு கிடைப்பதாகத் தெரியவில்லை. கட்டணங்கள் தானாகவே தடுத்து நிறுத்தப்பட்டு, ஆய்வுக்குப் பின்னரே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பொதுமக்கள் வழக்கம் போல் அதிர்ச்சியளிக்கும் மின் கட்டண ரசீதுகளையே பெற்று வருகின்றனர்.

“கடந்த இரு மாதங்களுக்கு முன்பு எந்த அளவு உயர்த்தப்பட்ட கட்டணம் வந்ததோ, அதே அளவு அல்லது அதைவிடக் கூடுதல் கட்டணமே இந்த முறையும் வந்துள்ளது” எனப் பல பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

பொதுமக்களின் குற்றச்சாட்டும் கொந்தளிப்பும்

மின் வாரியத்தின் இந்த அதிவேகக் கட்டணச் சரிபார்ப்பு திட்டம் வெறும் ‘கண் துடைப்பு நடவடிக்கை’ மட்டுமே என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் சாடுகின்றனர்.

முறைசாரா அளவீடு: மீட்டர் ரீடிங் எடுப்பதில் இன்னமும் தாமதமும் பிழைகளும் தொடர்கின்றன. இதனால் பயன்பாட்டு யூனிட்டுகள் அதிகரித்து, பொதுமக்கள் தானாகவே அதிகக் கட்டணப் பட்டியலில் தள்ளப்படுகின்றனர். அதிகாரிகளின் அலட்சியம்: 20% கட்டணம் அதிகரித்தாலும், அதை ஆய்வு செய்யும் அதிகாரிகள் முறையான விசாரணை இன்றி அப்படியே ஒப்புதல் வழங்கி நுகர்வோருக்கு அனுப்பி வைக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நேரடித் தீர்வு இல்லை: புகார்களைத் தெரிவிக்க மின் வாரிய அலுவலகங்களை நாடினால், உரிய பதில் அளிக்கப்படாமல் ‘ஆன்லைனில் கணக்கிடப்பட்டது சரியானதே’ என்று கூறி திருப்பி அனுப்பப்படுவதாக மக்கள் புலம்புகின்றனர்.

Budget-ல் வந்த முக்கிய அறிவிப்புகள்…உங்க வரி குறையப்போகுதா?

நுகர்வோரின் எதிர்பார்ப்பு என்ன?

அரசு மற்றும் மின்சார வாரியம் வெறும் அறிக்கைகளோடு நிப்பாட்டிக்கொள்ளாமல், களத்தில் மீட்டர் ரீடிங் எடுக்கும் முறையை வெளிப்படைத்தன்மையுடன் மாற்ற வேண்டும். தானாகவே சிஸ்டம் தடுப்பதாகக் கூறுவதை விட, உண்மையில் எதனால் கட்டணம் உயர்ந்துள்ளது என்பதை நுகர்வோருக்குத் தெளிவுபடுத்தும் பொறிமுறையை உருவாக்க வேண்டும். பொதுமக்களின் சுமையைக் குறைக்கத் தவறான மின்சார ரசீதுகளை உடனடியாகச் திருத்தி, நியாயமான முறையில் கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என்பதே அனைத்துத் தரப்பு மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Source link