மிஸ் வேர்ல்ட் 2026!. அழகால் உலகை வென்ற டொமினிகன் அழகி!. புது வரலாறு படைத்து அசத்தல்!. | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

வியட்நாமில் நேற்று (செப்டம்பர் 5) நடைபெற்ற பிரம்மாண்டமான 73-வது உலக அழகிப் போட்டியில் (Miss World 2026), டொமினிகன் குடியரசை சேர்ந்த ஜோஹெய்ரி மோலா (Joheirry Mola) வெற்றி பெற்று ‘மிஸ் வேர்ல்ட் 2026’ மகுடத்தைக் கைப்பற்றினார். இந்த நெகிழ்ச்சியான தருணத்தில், கடந்த ஆண்டின் உலக அழகியான தாய்லாந்தின் ஓபல் சுச்சாதா சுவாங்சஸ்ரீ அவருக்கு புதிய கிரீடத்தைச் சூட்டினார்.

இந்தப் போட்டியில் ஸ்பெயின் நாட்டின் எலிசபெத் ரெய்னஸ் முதல் ரன்னர்-அப் பட்டத்தையும், மலேசியாவைச் சேர்ந்த தானுசியா செட்டி இரண்டாவது ரன்னர்-அப் பட்டத்தையும் தட்டிச் சென்றனர். இறுதிச் சுற்றில் டொமினிகன் குடியரசு தவிர்த்து, ஸ்பெயின், மலேசியா, போட்டியை நடத்திய வியட்நாம், தென்னாப்பிரிக்கா மற்றும் ‘மக்கள் தேர்வு’ பிரிவில் வென்ற எரித்திரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த அழகிகள் டாப் 6 இடங்களைப் பிடித்தனர்.

இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய டாப் 6 அழகிகள்:

அமெரிக்கா & கரீபியன்: ஜோஹெய்ரி மோலா (டொமினிகன் குடியரசு – வெற்றியாளர்)

ஐரோப்பா: எலிசபெத் ரெய்னஸ் (ஸ்பெயின்)

ஆசியா & ஓசியானியா: லே நுயென் பாவோ ንகோக் (வியட்நாம்)

பியூட்டி வித் எ பர்பஸ் (Beauty With a Purpose): தானுசியா செட்டி (மலேசியா)

மக்கள் தேர்வு (People’s Choice): ஸ்னிட் ஹாப்டாப் (எரித்திரியா).

இந்தியாவின் சார்பில் கலந்துகொண்ட நிகிதா போர்வால், டாப் 40 சுற்றோடு போட்டியில் இருந்து வெளியேறினார். அவர் டாப் 20 இடத்திற்கு முன்னேறவில்லை என்றாலும், உலக அழகிப் போட்டிகளில் தொடர்ந்து 5-வது முறையாக இந்தியா டாப் 40 இடங்களுக்குள் நுழைந்து தனது முத்திரையைப் பதித்துள்ளது. இந்திய அமைப்பும், நிகிதா நாட்டைப் பெருமையுடன் பிரதிநிதித்துவப்படுத்தியதாகப் பாராட்டியுள்ளது.

‘மிஸ் இந்தியா ஆர்கனைசேஷன்’ (Miss India Organisation) தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜோஹெய்ரி மோலாவின் சாதனையைப் பாராட்டி ஒரு பதிவை வெளியிட்டது. அப்பதிவில், “மிஸ் வேர்ல்ட் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. 73-வது ‘மிஸ் வேர்ல்ட்’ பட்டத்தை வென்ற டொமினிகன் குடியரசின் ஜோஹெய்ரி மோலாவிற்கு மனமார்ந்த வாழ்த்துகள்,” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் அதில், “‘மிஸ் வேர்ல்ட்’ ஆக உங்கள் பதவிக்காலம் தாக்கம் மிக்கதாகவும், கருணை மற்றும் மறக்க முடியாத அனுபவங்கள் நிறைந்ததாகவும், எல்லைகளைக் கடந்து பலரது வாழ்க்கையை ஊக்கப்படுத்தும் ஆற்றல் கொண்டதாகவும் அமையட்டும். வாழ்த்துகள் ஜோஹெய்ரி. இந்த மகுடம் உங்களுடையது; உங்கள் பயணத்தின் தொடக்கத்தை இப்போது உலகம் உற்றுநோக்குகிறது,” என்றும் கூறப்பட்டிருந்தது.

Source link