திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று காலை நடந்த நிலையில், நீதிபதிகள் வழக்கை வரும் நவம்பர் 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். அதுவரை அவர் புழல் சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
நவம்பர் 2ஆம் தேதி வரை அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு ஜாமீன் கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது. தனக்கு கணைய பாதிப்பு இருப்பதால் உடல்நிலை பாதிப்பை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்குமாறு தனது மனுவில் கேட்டுக் கொண்டிருந்தார். இந்த மனு இன்று காலை 11 மணிக்கு ஊழல் தடுப்பு பிரிவு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனால் உடனடியாக ஜாமீன் கிடைக்காத சூழல் ஏற்பட்டிருக்கிறது.
அன்பில் மகேஷ், போலீசார் மனுவும் ஒத்திவைப்பு
அடுத்த 4 நாட்கள் புழல் சிறையில் அடைக்கப்பட வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதற்கிடையில் தனது வீட்டில் கைப்பற்றப்பட்ட மின்னணு சாதனங்களை திருப்பி தருமாறு அன்பில் மகேஷ் மனு தாக்கல் செய்திருந்தார். மேலும் அன்பில் மகேஷை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் அனுமதி கேட்டிருந்தனர். இந்த இரண்டு மனுக்களும் நவம்பர் 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருப்பது கவனிக்கத்தக்கது.
ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை! – anbil mahesh
நீதிமன்றத்தில் முத்துக்குமார் இன்று சரண்
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்று தருவதாக பல கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக குற்றம்சாட்டப்படும் வழக்கில் திமுக முன்னாள் எம்.எல்.ஏ முத்துக்குமாரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இவர் அன்பில் மகேஷ்க்கு மிகவும் நெருக்கமான நண்பர். மேலும் இந்த வழக்கில் ஏ2 குற்றவாளியாக குற்றம்சாட்டப்பட்டவர். இவரை பிடித்தால் முழு விவரங்கள் தெரியவரும் என்பது போலீசாரின் கணக்கு.
அன்பில் மகேஷ் ஜாமீன் கிடைப்பதில் சிக்கல்
ஆனால் பல மாதங்களாக தலைமறைவாக இருந்த சூழலில், முன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அதை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனால் வேறு வழியின்றி இன்று காலை சென்னை ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சத்தியமூர்த்தி முன்பு சரணடைந்தார்.
இவர் பிடிபடும் வரை அன்பில் மகேஷை போலீசார் அவ்வளவு எளிதில் விட மாட்டார்கள். ஜாமீன் கிடைப்பதற்கு முட்டுக்கட்டை போடுவர் என்று வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். எனவே தான் நீதிமன்றத்தில் முத்துக்குமார் சரணடைந்திருப்பதாக கூறுகின்றனர்.
தனியார் பள்ளிகள் அங்கீகார வழக்கில் கைதானவர்கள்
பி.டி.அரசகுமார் – தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் சுரேஷ் – பி.டி.அரசகுமாரின் உதவியாளர் ராஜா – அன்பில் மகேஷின் தனிப்பிரிவு உதவியாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி – முன்னாள் அமைச்சர் முத்துக்குமார் – முன்னாள் எம்.எல்.ஏ, மாநில பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர்
Source link
