உலகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் பிரபலமான சமூக வலைத்தளமான மெட்டா எனப்படும் பேஸ்புக் உலகின் பல்வேறு நாடுகளிலும் முடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள முடியாமல் பயனர்கள் தவித்து வருகின்றனர்.
மெட்டா சமூக வலைத்தளம் முடங்கியது குறித்த தகவல், எக்ஸ் (ட்விட்டர்) உள்ளிட்ட பிற சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அதோடு தகவல் தொடர்பு கிடைக்காததால் ஃபேஸ்புக் பயன்படுத்தும் இணையவாசிகள் அவதியடைந்துள்ளனர். மெட்டா சமூக வலைத்தளம் முடங்கியது குறித்து அந்நிறுவனம் சார்பில் அதிகாரப்பூர்வத் தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
