முடிஞ்சா சாட்டைய தொட்டுப் பாருங்க: சுள்ளான் மதன் கேங்குக்கு சவால் விடும் நெட்டிசன்கள்? – touch sattai durai murugan if you dare netizens challenge to sivagangai rowdy sullan madhan gang

சிவகங்கை சுள்ளான் மதன் கொலைக்குப் பிறகு அவரது ஆதரவாளர்கள் இன்ஸ்டாகிராமில் பழிவாங்கும் பதிவுகளை வெளியிட்டு வரும் நிலையில், யூடியூபர் சாட்டை துரைமுருகன் இளைஞர்களிடையே அதிகரிக்கும் வன்முறை குறித்தும் சுள்ளான் கேங் குறித்தும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இதைப் பகிரும் நெட்டிசன்கள், “முடிந்தால் சாட்டையைத் தொட்டுப் பாருங்கள்.. சாட்டையை கொள்ள முடியுமா” எனச் சுள்ளான் மதன் கேங்குக்குச் சவால் விடுத்து வருகின்றனர். சமூக வலைதள வன்முறையைக் கட்டுப்படுத்தக் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

கவின் ஆணவக்கொலை சம்பவத்தின்போதே சுபாஷினியின் சகோதரர் சுர்ஜித் ஆயுதங்களுடன் இன்ஸ்டா ஸ்டோரி பதிவிட்டதாகக் கூறப்பட்ட நிலையில் உளவுத்துறை என்ன செய்துகொண்டிருந்தது எனக் கேள்வி எழுப்பப்பட்டது .தற்போது சுள்ளான் மதன் எனச் சொல்லப்படக்கூடிய சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த நபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவமும், அதனைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் வெளியான பதிவுகளும் இணையம் முழுக்கப் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றன.

இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருந்த சுள்ளான் மதன்?

இன்ஸ்டாகிராமில் ஏற்கனவே பிரபலமாக இருந்த ரவுடி சுள்ளான் மதன், மஞ்சுவிரட்டில் கலந்துகொள்ளச் சென்ற நிலையில், கரும்புத் தோட்டத்திற்குள் ஓடவிட்டு மர்ம நபர்களால் கொல்லப்பட்டிருக்கிறார். இவர்மேல் 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கக்கூடிய சூழலில், சமீபத்தில் ராமனை வெளியே வந்த இவரின் ஆதரவாளர்கள், “சுள்ளான் மதனின் கொலைக்குப் நிச்சயம் பழி தீர்க்கப்படும்; அடுத்து உங்கள் முறை, காத்திரு பகையே” என இன்ஸ்டாவில் ஸ்டோரி வைத்து வருகின்றனர்.

ஆயுதங்களுடன் ரீல்ஸ் ?

சுள்ளான் மதன் பலமுறை ஆயுதங்களோடு இருக்கும் வீடியோக்கள் மற்றும் ரீல்ஸ்களை இன்ஸ்டாகிராமில் பரப்பப்படுகிறது. .சில வீடியோக்களில் அவர் துப்பாக்கியால் சுடுவது போன்ற காட்சிகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இவ்வளவு பகிரங்கமாகவும் வெளிப்படையாகவும் துப்பாக்கியைப் பயன்படுத்தி வீடியோ எடுத்து, ரீல்ஸ் பதிவிட்டு வரும் சூழலில் காவல்துறை என்ன செய்தது என்ற கேள்விகள் தற்போது எழுந்திருக்கின்றன.

சாட்டை துரைமுருகன் வீடியோக்கள்

இந்தச் சூழலில்தான் சுள்ளான் மதனின் கொலை விவகாரம் குறித்து யூடியூபர் சாட்டை துரைமுருகன் தொடர்ச்சியாக வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். மேலும், அவர் அந்த வீடியோக்களில், “இந்தச் சிறுவயது இளைஞர்கள் கொலைவெறியிலும் ஜாதி வெறியிலும் வாழ்க்கையைத் தொலைத்து நிற்கிறார்கள்” எனக் கூறி, அவர்களின் கொலைகள், அவர்களுக்கு இடையே இருக்கக்கூடிய பகை மற்றும் அவர்களின் தொடர்புகள் பற்றித் தொடர்ச்சியாகப் பேசி வருகிறார்.

நெட்டிசன்கள் சவால்?

இந்தச் சூழலில்தான் நெட்டிசன்கள் சாட்டையின் பேச்சைப் பகிர்ந்து, “முடிந்தால் சாட்டையைத் தாக்குங்கள் பார்ப்போம்; உங்களால் ஏதாவது செய்ய முடியுமா?” எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் சுள்ளான் மதன் குறித்த தகவலும் தமிழ்நாட்டின் சென்சேஷனலான டாபிக்காக மாறி உள்ளது.

காவல்துறை என்ன செய்கிறது?

இப்படி சரித்திர பதிவேடு குற்றவாளிகள் எப்படி வெளியில் சாதாரணமாக ரீல்ஸ், போட்டோ போட்டு சுதந்திரமாக சுற்றுகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது ஒரு கிண்டல் பதிவாகப் பார்க்கப்பட்டாலும், அவர்கள் பல கொலைகளிலும் ஹவாலா ஊழல்களிலும் சம்பந்தப்பட்டவர்களாகத் தெரிகிறது. காவல்துறை இந்தப் போக்கைக் கண்டித்து, நிச்சயம் இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்படுகிறது.

Source link