முதல்வர் மவுனம் காக்காமல் குரல் கொடுக்க வேண்டும்; கோவையில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மாணவர்கள் கோஷம்

கோவையில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், நீட் எதிர்ப்பு மாணவர்கள் – இளைஞர்கள் கூட்டமைப்பு சார்பில்  கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தோர் பங்கேற்று, கைகளில் பதாகைகளை ஏந்தி நீட் தேர்வுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். “நீட் தேர்வை ரத்து செய்”, “ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானே பதவி விலகு” உள்ளிட்ட கோஷங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்து உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்றும், தமிழக முதலமைச்சர் மவுனம் காக்காமல் மாணவர்களின் கோரிக்கைக்கு ஆதரவாக வலுவான குரல் கொடுக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் கோஷமிட்டனர்.

பி. ரஹ்மான் கோவை மாவட்டம்.

Source link