திமுகவின் கலாச்சாரமே மரியாதையின்றி பேசுவதுதான். எனவே திமுகவினரின் பேச்சை பொறுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு கிடையாது என அர்ஜுன் சம்பத் ஆதரவாக பேசியுள்ளார்.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் நடைபெற்றது.
தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் மற்றும் கழிப்பறை கழிவுகள்
இக்கூட்டத்தில் நெல்லை மாவட்டம் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் மற்றும் கழிப்பறை கழிவுகள் கலப்பதைத் உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கியக் கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அர்ஜுன் சம்பத் கூறியதாவது..தமிழ்நாட்டில் நீட் தேர்வு எதிர்ப்பு என்ற பெயரில் அரசைச் சீர்குலைக்கக்கூடியதும், பிரிவினைவாதத்தைத் தூண்டக்கூடியதுமான வேலைகள் நடந்து வருவதாகக் குற்றம்சாட்டினார்.
திமுக பாஜக கூட்டணியா?நெருக்கடியில் திமுக? காரணம் இதுதானா?
அந்த வகையில் நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் “ஜோசப் விஜய்” தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும், நீட் என்ற பெயரால் தமிழ்நாட்டில் வன்முறையை அனுமதிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.மேலும், நீட் விவகாரத்தை சட்டபூர்வமாக மட்டுமே அணுக வேண்டும் எனத் தெரிவித்தார்.
திமுகவின் கலாச்சாரமே மரியாதையின்றி பேசுவது தான்
தொடர்ந்து பேசிய அவர், திமுகவினருக்கு தலைவர்களுக்கு மரியாதை கொடுத்துப் பேசும் கலாச்சாரம் கிடையாது என்றும், தமிழக முதலமைச்சரை மரியாதை குறைவாகப் பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் சுட்டிக்காட்டினார். கருத்துரிமைக்கும் எல்லை உண்டு என்பதால், இது போன்ற பேச்சுகளைத் தமிழக வெற்றிக் கழகம் பொறுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றார்.
மேலும், நீட் விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் முடிவைக் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரிக்க வேண்டிய அவசியம் இல்லை எனக் குறிப்பிட்ட அவர், த.வெ.க-விற்கான ஆதரவைக் கம்யூனிஸ்ட் கட்சிகள் திரும்பப் பெற வேண்டும் என்றும், அந்த இயக்கம் தமிழ்நாட்டில் முற்றிலுமாகத் தடை செய்யப்பட வேண்டும் என்றும் கடுமையாகச் சாடினார். இந்த சந்திப்பின் போது இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
