கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினருக்கு மத்திய அரசு அழைப்பு!

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித்துறையில் நிலவும் முறைகேடுகளைக் கண்டித்துக் கரப்பான் பூச்சி மக்கள் கட்சியினர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கடந்த ஒரு மாதமாக போராட்டம் நடத்தி வந்த நிலையில் கடந்த 20ஆம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி அமைதி பேரணி நடத்த முயன்ற போது அவர்கள் மீது காவல்துறையினர் மற்றும் துணை ராணுவப் படையினர் வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே கடந்த மூன்று நாட்களாகப் போராட்டத்தை ஒடுக்க ஒன்றிய அரசு பல்வேறு நடைமுறைகளைக் கையாண்டு வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால், டெல்லி ஜந்தர் மந்தரிலும் கரப்பான்பூச்சி கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினருடன் மத்திய அரசு நடைபெற்ற இரண்டு கட்ட பேச்சுவார்த்தைகளிலும் எந்தவித முடிவும் எட்டப்படவில்லை எனப் போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டியிருந்தனர். இதையடுத்து, மூன்றாவது கட்ட ஆலோசனைக்காக கரப்பான் பூச்சி ஜனதா கட்சியை மத்திய அரசு அழைத்துள்ளது. 

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் பிரதிநிதிகள், இன்று (24.07.2026) பிற்பகல் 12:30 மணிக்கு மத்திய அமைச்சர்களுடன் முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர். அதன்படி  நடைபெற உள்ள இன்றைய சந்திப்பில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா  மற்றும் பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் ஆகியோர், மாணவர் பிரதிநிதிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.

Source link