முதல்வர் விஜய்க்கு மிரட்டல்; விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ கைது

தூத்துக்குடி: முதல்வர் விஜய்க்கு மிரட்டல் விடுத்த புகாரில், விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனை போலீசார் இன்று கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் நேற்று முன்தினம் (ஜூலை 18) கருணாநிதி பிறந்தநாளையொட்டி, நடந்த கட்சி பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன், ‘முதல்வர் விஜய் சட்டசபையை பூட்டினால் எலும்பை உடைப்போம்,’ என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக தவெகவினர் போலீஸில் புகார் அளித்தனர். அதன்பேரில், இன்று அதிகாலை விளாத்திகுளம் பகுதியில் அமைந்துள்ள மார்க்கண்டேயனின் வீட்டுக்கு சென்ற போலீசார், அவரை கைது செய்தனர். அவரது கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆதரவாளர்கள் போலீஸ் வாகனம் முன்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது, அவர்களை தடுத்து நிறுத்தி, எம்எல்ஏ மார்க்கண்டேயனை போலீசார் அழைத்துச் சென்றனர்.

முன்னதாக, இந்த மாதத்தின் துவக்கத்தில் முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேசியதாக முன்னாள் அமைச்சரும், திமுக எம்எல்ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Source link