முதல்வர் விஜய் ஒரு பைலை திறந்ததற்கே ஒரு முன்னாள் அமைச்சர் கைது; அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி

கோவையில் அமைச்சர் நிர்மல்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தேனி சிறையில் இந்து 17 பேர் தப்பிய நிலையில் 4 பேர் மீண்டும் கைது செய்யப்பட்டனர். 13 பேரை பிடிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. சிறையில் ஏதேனும் பாதுகாப்பு குறைபாடு இருந்தால் சிறைத்துறை டிஜிபி தலைமையில் ஆய்வு செய்யப்படும்.

முதல்வர் விஜய் தனது மேசையில் இருந்த 3 பைல்களில் ஒரு பைலை ஓபன் செய்துவிட்டார். பைலை திறக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சவால் விட்டார். பைலை திறந்துவிட்டோம். ஒரு கோப்பை திறந்ததற்கே ஒரு முன்னாள் அமைச்சர் கை து செய்யப்பட்டு உள்ளார். இன்னும் பல கோப்புகள் விசாரணையில் இருக்கிறது.

குழந்தை பாதுகாப்பு தொடர்பான சான்றிதழ் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளது. ரூ.400 கோடி வரை முறைகேடு செய்துள்ளனர். பார்டி பண்ட் வாங்கியதில் ஊழல் நடந்ததற்கு மகேஷ் வழக்கே ஒரு உதாரணம். மகேஷை காவலில் எடுத்து விசாரித்தால் தான் பல பேர் வந்து தைரியமாக புகார் அளிப்பார்கள். இவ்வாறு நிர்மல்குமார் கூறினார்.

Source link