சென்னையில் திமுக மகளிர் தொண்டரணி சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக துணை பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, சென்னை மாநகர மேயர் பிரியா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் பேசிய பெண் நிர்வாகி சுதா தீனதயாளன் என்பவர், முதல்வர் விஜய் குறித்து தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்திருந்தார்.
முதல்வர் விஜய்யை அவர் விமர்சித்திருந்த போது மேடையில் அமர்ந்திருந்த மேயர் பிரியா சிரித்துக் கொண்டும், கனிமொழி முகம் சுழிந்துக் கொண்டும் இருந்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெண் நிர்வாகியின் பேச்சுக்கும், அவரது பேச்சை கண்டிக்காமல் இருந்த மேயர் பிரியா மற்றும் கனிமொழிக்கும் தவெக அமைச்சர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், முதல்வர் விஜய் குறித்து அவதூறாகவும் ஆபாசமாகவும் பேசிய திமுக மகளிரணி நிர்வாகி சுதா தீனதயாளன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தவெக நிர்வாகி அளித்த புகாரின் அடிப்படையில் எஸ்பிளனேடு காவல் நிலைய போலீசார் திமுக நிர்வாகி மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
