முதல்வர் விஜய் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம்; தகிக்கும் தமிழக அரசியல்!

முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் இன்று (29-10-26) காலை 10 மணியளவில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் பல்வேறு திட்டங்கள், நிர்வாக ரீதியிலான முடிவுகள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவது, அரசின் நல திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. பட்டினப்பாக்கம் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கு மீனவர்கள் தெரிவித்து வரும் எதிர்ப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.