முதல்வர் விஜய் பேச்சால் கிளம்பிய சர்ச்சை.. விசிக தலைவர் திருமாவளவனின் அமைதி: அப்செட்டில் திமுகவினர் – dmk supporters criticism sparked by vck leader mp thirumavalavan silence

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரான திருமாவளவன், தமிழ்நாட்டில் நடக்கும் முக்கிய பிரச்சனைகள் அனைத்திற்காகவும் தவறாமல் குரல் கொடுப்பவர். அதோடு அரசியல் களத்தில் நடைபெறும் நிகழ்வுகளுக்கும், அவருடைய கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சட்டமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை உருவகேலி செய்யும் விதமாக முதல்வர் விஜய் பேசியுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து விசிக தலைவர் திருமாவளவன் கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருப்பது அரசியல் வட்டாரத்தில் விவாத பொருளாக மாறியுள்ளது.

மிசா குறித்து பேசிய விஜய்

அதாவது கடந்த திங்கட்கிழமை அன்று சட்டமன்றத்தில் முதல்வர் ஜோசப் விஜய் பதிலுரை அளிக்கையில் மிசா குறித்து பேசும்போது சைகை ஒன்றை காட்டினார். இது முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மிசாவில் சிறையில் இருக்கும்போது தாக்கப்பட்டதை கிண்டல் செய்யும் விதமாக விஜய் சைகை காட்டியதாக அரசியல் வட்டாரத்தில் சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. இது தொடர்பாக தமிழக அரசியல் கட்சிகள் பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றன.

கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் எதிர்ப்பு

குறிப்பாக தவெக அரசுக்கு ஆதரவு அளித்த கம்யூனிஸ்ட் கட்சிகள் இவ்விவகாரம் தொடர்பாக பேசிவிட்டன. முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் போலீசாரால் தாக்கப்பட்டதை கிண்டலடிக்கும் விதமாக விஜய் பேசியுள்ளது சரியல்ல என கம்யூனிஸ்ட் கட்சிகள் முதல்வரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனிடையில் இவ்விவகாரம் தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் எந்த கருத்தும் தெரிவிக்காமல் மௌனம் காத்து வருகிறார்.

திருமாவளவனின் மௌனம்

தமிழ்நாடு அரசியலில் முக்கிய பிரச்சனைகள் அனைத்தை பற்றியும் கருத்து தெரிவிக்கும் திருமாவளவன், இவ்விவகாரத்தில் மௌனம் காப்பது ஏன் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். குறிப்பாக திமுகவினர் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூட்டணியில் இருந்த சமயத்தில் விசிகவுக்கும், திருமாவளவனுக்கும் அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார். ஆனால் தற்போது விஜய்யின் பேச்சு குறித்து அவர் எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருப்பது சரியல்ல என இணையத்தில் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

திமுகவினர் கருத்து

என்னதான் கூட்டணி மாறினாலும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இழிவுப்படுத்தும் விதமாக நடந்த சம்பவத்திற்கு மௌனம் காப்பது சரியல்ல எனவும் கடுமையான எதிர்ப்பினை திமுகவினர் சோஷியல் மீடியாவில் பதிவு செய்து கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில் விசிகவின் பொதுச் செயலாளர் சிந்தனை செல்வன் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பதிவும் இணையத்தில் கவனம் பெற்று கொண்டிருக்கிறது.

சிந்தனை செல்வன் பதிவு

அதாவது “அக்கிரமங்களை அரங்கேற்றும் அநீதியாளனை விட, அது அக்கிரமம் அநீதி என்று அறிந்தே அமைதி காக்கும் அறிவாளிகளின் மவுனம் கொடூரமானது” என பதிவிட்டுள்ளார். இதனையடுத்து உங்களுக்குதான் இந்த பதிவு எனவும் திமுகவினர் விசிக தலைவர் திருமாவளவனை மென்சன் செய்து வருகின்றனர். இது சோஷியல் மீடியாவில் பரபரப்பினையும், விவாதங்களையும் கிளப்பியுள்ளது.

Coat Suit போடும் CM விஜய்! M.K .Stalin அடித்த நச் Comment

முதல்வர் அளித்த விளக்கம்

இதற்கிடையில் முதல்வர் ஜோசப் விஜய் தனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டது. யாரையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல என விளக்கம் ஒன்றினை அளித்துள்ளார். இதனை தொடர்ந்து விசிக தலைவர் திருமாவளவன் இனிமேல் இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவிப்பார். முதல்வரே இதுக்குறித்து விளக்கம் அளித்து விட்டதால், இனிமேல் இதுப்பற்றி பேச எதுவும் இல்லையென திருமாவளவன் கூறுவார் எனவும் இணையத்தில் சிலர் கருத்துக்களை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Source link