முதல் டி -20 கிரிக்கெட்: இந்திய அணிக்கு 126 ரன் இலக்கு

ஹராரே: இந்திய அணிக்கு எதிரான முதல் டி -20 கிரிக்கெட் போட்டியில் ஜிம்பாப்வே அணி 125 ரன்னுக்கு அல் அவுட் ஆனது.

ஜிம்பாப்வே சென்றுள்ள இந்தியா அணி 3 போட்டிகள் கொண்ட டி -20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் செய்தது. இதனையடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு, துவக்கம் சரியாக அமையவில்லை. பிரையன் பென்னேட் ரன் எடுக்காமல் அவுட் ஆனார். பென் கரன் 10, டியோன் மையர்ஸ் 6, கேப்டன் சிக்கந்தர் ரசா 4 ரன்னில் அவுட் ஆனார்.

ரியான் புரி 26 ரன்னுக்கும், வெஸ்லி மதேவ்ரே 33 ரன் எடுத்து அவுட் ஆனார். இறுதியில் ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.இந்திய அணியின் மயங்க் யாதவ் 2, பிரின்ஸ் யாதவ் 2 விக்கெட் வீழ்த்தினர்.

Source link