பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 119வது பிறந்த நாள் விழா மற்றும் 64வது குருபூஜை, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் வரும் இன்று (30-10-26) கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவையொட்டி தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பசும்பொன்னுக்கு சென்று அங்கிருக்கும் முத்துராமலிங்க தேவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், இன்று மதுரை மாவட்டம் கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் திமுக மூத்த நிர்வாகிகள் உடனிருந்தனர். அதே போல் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மருது பாண்டியர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிலையில், சென்னை நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து, சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள முத்துராமலிங்க தேவரின் படத்திற்கு முதல்வர் விஜய், சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், அமைச்சர்கள் என்.ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், விக்னேஷ் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
