பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 119வது பிறந்த நாள் விழா மற்றும் 64வது குருபூஜை, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் வரும் இன்று (30-10-26) கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவையொட்டி தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பசும்பொன்னுக்கு சென்று அங்கிருக்கும் முத்துராமலிங்க தேவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், இன்று மதுரை மாவட்டம் கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் திமுக மூத்த நிர்வாகிகள் உடனிருந்தனர்.
