முன்னாள் அமைச்சர் அன்பில் மகஷே காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.
தனியார் பள்ளிகளுக்கு அங்கிகாரம் வழங்க லஞ்சம் பணம் பெற்றதாக திமுக முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் உள்ளார். இந்நிலையில் அவரை விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அன்பில் மகஷே காவலில் எடுத்து விசாரிக்க சென்னை சிறப்பு நீதி மன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அன்பில் வீட்டில் சோதனை
தமிழகத்தில் கடந்த 2021-2026 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில், தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குதல், பள்ளிகளின் தரத்தை உயர்த்துதல் மற்றும் டிடிசிபி (DTCP) போன்ற அரசின் பல்வேறு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்யப்பட்டதில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் தொடர்புள்ளதாகக் கூறி அவரது வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்றது.
அன்பில் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
இதுகுறித்து வழக்கு விசாரணையில் அன்பில் மகேஷ் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்த நிலையில், அவரது முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனால் 100 கோடி லஞ்சப் புகார் வழக்கில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்படலாம் எனக் கூறப்பட்ட நிலையில், நேற்று அவர் கைது செய்யப்பட்டார்.
புழல் சிறையில் அடைப்பு
அதனைத் தொடர்ந்து மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அன்று நள்ளிரவு அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் சென்னையில் உள்ள புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
மத்திய போலீசார் விசாரணை
இந்த வழக்கு பூதாகரம் ஆகியுள்ள நிலையில், இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் விசாரணை வலையத்திற்குள்ளாக கொண்டு வரப்பட உள்ளதாகவும் அதற்கான வேலைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ள நிலையில், முன்னாள் திமுக அமைச்சர் அன்பில் மகேஷை காவலில் எடுத்து விசாரிக்க, மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.
பின்னணி மற்றும் முதற்கட்ட கைதுகள்
தனியார் பள்ளிகளுக்குத் தேவையான துறைசார்ந்த சான்றிதழ்கள், சட்டப்பூர்வ அனுமதிகள் மற்றும் பள்ளி அங்கீகாரங்களை அரசிடமிருந்து பெற்றுத் தருவதாகக் கூறி, பள்ளி நிர்வாகிகளிடம் சிலர் சட்டவிரோதமாகப் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாகப் புகார்கள் எழுந்தன. பாதிக்கப்பட்ட நிர்வாகிகளின் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், விரிவான கள விசாரணையைத் தொடங்கினர். முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், இந்த மோசடியில் தொடர்புடைய இடைத்தரகர்களான பி.டி. அரசகுமார், சுரேஷ் மற்றும் ராஜா ஆகிய மூவரை போலீசார் ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Source link
