இந்திய சினிமாவில் இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கும் ராமாயணம் திரைப்படம், தீபாவளி பண்டிகை முன்னிட்டு வெளியாக உள்ள நிலையில், படத்தின் முன்பதிவின் வசூல் குறித்த நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது.
இந்தியாவில் அதிகம் பேசப்படும் புராணங்களில் முக்கியமானது ராமாயணம். இந்த ராமாயணத்தை அடிப்படையாக வைத்து பல படங்கள் வந்துவிட்டாலும், அடுத்தடுத்து வெளியாகும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில், எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்கிறது. அந்த வரிசையில் தற்போது ராமாயணம் படம் தயாராகியுள்ளது, நித்தீஷ் திவாரி இயக்கத்தில் 2 பாகங்களாக உருவாகியுள்ள ராமாயணம் படத்தின் முதல் பாகம் நவம்பர் 5-ந் தேதி வெளியாக உள்ளது.
இந்த படத்தில் ராமனாக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, ராவணனாக யஷ் ஆகியோர் நடித்துள்ளனர். சன்னி தியோல், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ராமாயணம் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், இந்த படத்தின் முன்பதிவு கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கியது. இதில் தற்போதுவரை இந்த படம் முன்பதிவில், இந்தியாவில் மொத்தமாக ரூ13.66 கோடியை எட்டியுள்ளது. படத்தின் முதல் மூன்று நாட்களில் 2,37,759 டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன.
இது குறித்து ‘ஃபிலிம்ஸ் டிஸ்கோர்ஸ்’ (Films Discourse) தகவலின்படி, அக்டோபர் 26-ஐ விட 27-ந் தேதி டிக்கெட் விற்பனை 19,946 அதிகரித்து, சுமார் 9.2% அதிகரித்துள்ளது. இதன் மூலம் மொத்த வசூல் ரூ1.09 கோடி, அதாவது சுமார் 8.7% அதிகரித்துள்ளது. அக்டோபர் 26 அன்று ‘லைவ்மிண்ட்’ (LiveMint) வெளியிட்ட முந்தைய அறிக்கையில் 2,17,813 டிக்கெட்டுகளும், ரூ12.57 கோடி மொத்த வசூலும் பதிவாகியிருந்தன.
சமீபத்திய டிக்கெட் விற்பனை அதிகரிப்பு, முந்தைய நாளின் தோராயமான 11% உயர்வை விடக் குறைவாக இருந்தது. இருப்பினும், நவம்பர் 5 அன்று படம் வெளியாவதற்கு முன்னதாக முன்பதிவுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதேபோல் ஷோக்களின் எண்ணிக்கை 166 நகரங்களில் 14,014 ஆக உயர்ந்தது. ஷ
மொத்த இருக்கைகளில் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளின் பங்கு 8.7% ஆக உள்ளது. சராசரி டிக்கெட் விலை ரூ577-லிருந்து ரூ575 ஆகக் குறைந்தது.
வரிகளுக்குப் பிந்தைய வசூல் ரூ10.63 கோடியிலிருந்து ரூ11.55 கோடியை எட்டியுள்ளது. முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளையும் சேர்த்து, மொத்த முன்பதிவு வசூல் ரூ23.37 கோடியிலிருந்து ரூ25.05 கோடியாக உயர்ந்துள்ளது.
டிக்கெட் விற்பனையில் டெல்லி-என்.சி.ஆர் (Delhi-NCR) பகுதி மும்பையைப் பின்தள்ளி மீண்டும் முதலிடத்தைப் பிடித்தது. டெல்லி-என்.சி.ஆர் 31,027 முன்பதிவுகளைப் பதிவு செய்துள்ள நிலையில், மும்பை 29,061 முன்பதிவுகளை பெற்றுள்ளது. நகர அளவிலான வசூலிலும் டெல்லி-என்.சி.ஆர் மொத்தமாக ரூ2.34 கோடியுடன் முதலிடத்தில் உள்ளது. மும்பை ரூ2.16 கோடியுடன் அடுத்த இடத்தில் உள்ளது. ஹைதராபாத்தில் 20,647 டிக்கெட்டுகளும், பெங்களூருவில் 19,852 முன்பதிவுகளும் பதிவாகின.
புனே 11,836 டிக்கெட் விற்பனையைப் பதிவு செய்தது, அதைத் தொடர்ந்து கொல்கத்தா 11,755 டிக்கெட்டுகளைப் பதிவு செய்தது. அகமதாபாத்தில் 7,389 டிக்கெட்டுகளும், புவனேஸ்வரில் 6,155 முன்பதிவுகளும் பதிவாகின. சென்னை 5,155 டிக்கெட்டுகளை எட்டி, ஜெய்ப்பூரின் 4,355 டிக்கெட்டுகளை விட முன்னிலையில் இருந்தது.
