மும்பை- பெங்களூரு இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்: பயண நேரம் 6 மணி நேரம் குறையும்

புதுடில்லி: வந்தே பாரத் ரயில்களுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து அடுத்தகட்டமாக படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில், பெங்களூரு – மும்பை இடையே அக்டோபர் 31ம் தேதி முதலும், வாரணாசி – டில்லி இடையே நவம்பர் 1 முதல் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது.

6 மணி நேரம் குறையும்

மும்பை – பெங்களூரு இடையே உள்ள சுமார் 1000 கிமீ தூரத்தை இந்த வந்தே பாரத் ரயிலானது 15 மணி நேரம் 45 நிமிடங்களில் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பையில் இருந்து இரவு 8:10 மணிக்கு கிளம்பும் இந்த ரயில், மறுநாள் காலை 11:55 மணிக்கு பெங்களூரு வந்தடையும்.

மறுமார்க்கத்தில் பெங்களூருவில் இருந்து இரவு 7:50 மணிக்கு கிளம்பும் ரயில், மும்பைக்கு மறுநாள் காலை 11:55 மணிக்கு சென்றடையும்

தற்போது இந்த இரண்டு நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் உதயன் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்வதால் ஆகும் நேரத்தை விட வந்தே பாரத் ரயில் பயண நேரம் 6 மணி நேரம் 20 நிமிடம் குறையும்.

டில்லி வாரணாசி ரயில்

அதேபோல் வாரணாசியில் இருந்து 8:50 மணிக்கு கிளம்பும் வந்தே பாரத் ரயில், மறுநாள் காலை 5:55 மணி்கு டில்லி வந்தடையும்.

மறுமார்க்கத்தில் இரவு 9:40 மணிக்கு டில்லியில் இருந்து கிளம்பும் ரயில், மறுநாள் காலை 6:45 மணிக்கு வாரணாசியை சென்றடையும்.

தற்போது மேற்கு வங்கத்தின் ஹவுரா மற்றும் அசாமின் காமாக்யா இடையே படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது.

Source link