மும்பை வந்தார் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ

மும்பை: 3 நாள் பயணமாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ மும்பை வந்தார்.

தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யும் பணிகளில் இரு நாடுகளும் ஈடுபட்டுள்ள நிலையில், இவரது வருகை முக்கியத்துவம் பெறுகிறது.

விமான நிலையத்தில் அவரை இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் வரவேற்றார். பிறகு மும்பையில் உள்ள இந்தியாவின் நுழைவுவாயில் பகுதிக்கு மார்கோ ரூபியோ சென்றார். அவருடன் மஹாராஷ்டிரா முதல்வர் பட்னாவிசும் உடன் சென்றார். மார்கோ ரூபியோவை, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து இரு தரப்புஉறவு குறித்து பேச உள்ளார்.

இன்று மாலை மும்பையில் உள்ள ஜியோ கன்வென்ஷன் மையத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். நாளை குஜராத்தின் ஜாம் நகருக்கும் செல்ல உள்ளார்.

Source link