சென்னை: ஆதாரங்களோடு முறைகேடுகள் குறித்து புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் உறுதி அளித்துள்ளார்.
கடந்த 2021ம் ஆண்டு சட்ட விரோதமாக தனிநபர்கள் பெயருக்கு பதிவு செய்யப்பட்ட மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறக்கட்டளை சொத்து தொடர்பாக அறப்போர் இயக்கம் புகார் அளித்தது. இதையடுத்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷிடம் உத்தரவுபடி உடனடியாக 19 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கி உள்ளனர்.
இது குறித்து அமைச்சர் ரமேஷ் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் 60 கோடி மதிப்பிலான நிலத்தை முறைகேடாக தனிநபர்களால் பதிவு செய்யப்பட்டது தொடர்பான 2023ம் ஆண்டு அறப்போர் இயக்கம் கொடுத்த புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதை கவனத்தில் கொண்டுவந்தமைக்கு அறப்போர் இயக்கத்தினருக்கு நன்றி.
ஆதாரங்களோடு இதுபோன்ற முறைகேடுகள் குறித்த புகார்கள் அளித்தால் அதன் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் ரமேஷ் தெரிவித்து உள்ளார். இதற்கு அறப்போர் இயக்கம் அமைச்சர் ரமேஷ்க்கு நன்றி தெரிவித்து உள்ளது.
