திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உடல் நலக்குறைவால் இன்று மாலை நடைபெற இருந்த முப்பெரும் விழா ஒத்திவைக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
திமுக சார்பில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் முப்பெரும் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா ஆகியோரின் பிறந்தநாள்கள், திமுக தொடங்கப்பட்ட நாள் ஆகிய மூன்று முக்கிய நிகழ்வுகளை இணைத்து இந்த விழா நடத்தப்படுகிறது.
பக்கவாக பிளான் செய்த தவெக! நாளைக்கு என்ன நடக்கும்?
அந்த வகையில், 2026ஆம் ஆண்டுக்கான திமுக முப்பெரும் விழா இன்று (செப்.15) மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இன்று மாலை நடைபெற இருந்த திமுக முப்பெரும் விழா ஒத்திவைக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். விழா நடைபெறும் மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
