காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்துள்ளதால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து சரிந்து வருகிறது. அந்த வகையில் இன்றைய நீர் நிலவரம் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை 8 மணி நிலவரப்படி, அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 8,558 கன அடியாகக் குறைந்துள்ளது. நீர்வரத்து சரிந்ததன் காரணமாக, அணையின் நீர்மட்டமும் 92.08 அடியாகச் சரிந்துள்ளது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சரிவு
அதேவேளையில், காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயப் பணிகளுக்காக அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி, டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 12,000 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.அணைக்கு வரும் நீரின் அளவை விட, பாசனத்திற்காகத் திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் மேலும் குறைய வாய்ப்புள்ளதாகப் பாசனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் டெல்டா விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
Source link
