மேற்காசிய நாடுகளில் போர் பதற்றம்: விமான சேவைகள் மீண்டும் பாதிப்பு

சென்னை: மேற்காசிய நாடுகளில் மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளதால் குவைத், பக்ரைன் உள்ளிட்ட பகுதிகளில், அவ்வப்போது வான்வெளிகள், பாதுகாப்பு காரணமாக மூடப்பட்டு வருகின்றன. இதனால், சில மாதங்களுக்கு பின் மீண்டும், விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால், சென்னையில் இருந்து அபுதாபி, துபாய், பக்ரைன், சார்ஜா உள்ளிட்ட ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் குவைத் செல்லும் விமானங்கள் தாமதமாகி வருகின்றன.

இன்று( ஜூலை 21) சென்னையில் இருந்து அபுதாபி, துபாய், சார்ஜா, பக்ரைன், மஸ்கட், லண்டன், சிங்கப்பூர் ஆகிய இடங்களில் இருந்து சென்னைக்கு தாமதமாக விமானங்கள் வந்தன. அதே நாடுகளுக்கு புறப்படும் விமானங்களும், இங்கிருந்து தாமதமாக புறப்பட்டன.

இன்று மாலை 3:00 மணிக்கு, இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து, சென்னைக்கு வரவேண்டிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம், இங்கிருந்து மாலை 4:00 மணிக்கு புறப்படும் அதே விமானம் என, இரண்டு சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.

ரூ.4.50 கோடி கஞ்சா பறிமுதல்

தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு வரும் விமானத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக, நேற்று சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து பயணியர் விமானம் வந்தது. அதில், தமிழகத்தைச் சேர்ந்த பயணி ஒருவர், சுற்றுலா விசாவில் தாய்லாந்து சென்று திரும்பியது தெரிய வந்தது. அவர் மீது சந்தேகம் எழுந்ததை அடுத்து, அதிகாரிகள் விசாரணை செய்தனர்; விசாரணைக்கு அவர் ஒத்துழைக்கவில்லை. இதையடுத்து, அவரது உடைமைகளை சோதனை செய்தபோது, 4.50 கிலோ உயர்ரக கஞ்சா இருப்பது தெரிய வந்தத; அதன் மதிப்பு 4.50 கோடி ரூபாய். அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், பயணியிடம் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

Source link