“யாரும் துயரத்தில் இருக்கக் கூடாது!” கழுத்தில் டிராக்டர் டயருடன் தவித்த யானை!. பாதுகாப்பாக அகற்றிய வனத்துறை!. வைரல் வீடியோ! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

அசாம் மாநிலம் நுமாலிகர் பகுதியில், காட்டு யானை ஒன்றின் கழுத்தில் மிகப்பெரிய டிராக்டர் டயர் மாட்டிக்கொண்டு ஆபத்தான நிலையில் சுற்றிக் கொண்டிருந்தது. இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் பலரும் அந்த யானையின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்தனர்.

Golaghat, Assam – A wild elephant was seen moving around with a tractor tyre around it’s neck. A rescue team from CWRC Kaziranga with support from Golaghat Division of @assamforest and the local people successfully removed the tyre from its neck.

VC – Rahul Boruah pic.twitter.com/NTxCS4sHeX

— Kaushik Barua (@Airawat) September 10, 2026

வீடியோ வைரலான சில மணி நேரங்களிலேயே வனத்துறையினரும், வனவிலங்கு மறுவாழ்வு மற்றும் பாதுகாப்பு மையமும் (CWRC) இணைந்து உடனடியாகச் செயல்பட்டனர். யானையின் கழுத்தில் இருந்த டிராக்டர் டயரை பாதுகாப்பாக அகற்றி, அதை மீண்டும் தனது கூட்டத்துடன் இணைய வைத்தனர்.

#WATCH | Assam: A wild elephant spotted in Numaligarh town of Golaghat district with a tyre around its neck. The elephant, seemingly roaming around in search of food, was spotted near tea gardens. pic.twitter.com/UUW3fxBnaX

— ANI (@ANI) September 10, 2026

A tractor tire has gotten stuck around the neck of a wild elephant. In Morongi, Golaghat, a massive tractor tire was spotted lodged around the neck of an elephant roaming with a wild herd. The helpless animal has been wandering around carrying the tire on its neck. pic.twitter.com/JtZfLbuvtq

— Pranjit Saikia (@SaikiaPranjit) September 10, 2026

இதுகுறித்து அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா எக்ஸ் தளத்தில், “மனிதராக இருந்தாலும் சரி, விலங்காக இருந்தாலும் சரி, அசாமில் யாரும் துயரத்தில் இருக்கக் கூடாது. நுமாலிகரில் யானையின் கழுத்தில் சிக்கியிருந்த டயர் அதன் உயிருக்கே பெரும் அச்சுறுத்தலாக இருந்தது. உடனடியாக நடவடிக்கை எடுத்து டயரை அகற்றி, அதன் உயிரைக் காப்பாற்றி கூட்டத்தோடு சேர்த்துள்ளோம்” எனப் பதிவிட்டுள்ளார்.

इंसान हो या जानवर, असम में कोई भी पीड़ा में नहीं रहेगा।

नुमालीगढ़ में एक हाथी के गले में Tyre फँसा हुआ था, जो उसके जीवन के लिए एक बहुत बड़ी चुनौती थी।

हमने तुरंत एक्शन लिया और उसके गले से टायर को निकाला, जिससे उसकी जान भी बची और वह अपने झुंड के साथ फिर जुड़ सकी। pic.twitter.com/s2IodU6W7F

— Himanta Biswa Sarma (@himantabiswa) September 10, 2026

வீடியோக்கள் பரவிய சில மணி நேரங்களிலேயே விரைவாகச் செயல்பட்டு யானையைக் காப்பாற்றிய வனத்துறை மற்றும் CWRC குழுவினருக்குச் சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. ஆபத்தை உணர்ந்து சரியான நேரத்தில் செயல்பட்ட மீட்புக் குழுவினரின் இந்த விரைவு நடவடிக்கை குறித்துப் பலரும் நெகிழ்ச்சியுடன் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

Next Post

Fri Sep 11 , 2026

சீனாவின் கிழக்குக் கரைப் பகுதியில் அமைந்துள்ள குயிங்டாவோ (Qingdao) துறைமுகத்தில் உள்ள ஒரு கப்பல் கட்டும் தளத்தில், பழுதுபார்ப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சரக்குக் கப்பலில் வியாழக்கிழமை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். லைபீரியா நாட்டுக் கொடியுடன் கூடிய ‘ஓஷன் மெலடி’ (Ocean Melody) என்ற சரக்குக் கப்பல், ‘சீனா ஸ்டேட் ஷிப்பில்டிங் கார்பரேஷன்’ நிறுவனத்தின் பழுதுபார்க்கும் தளத்தில் பராமரிப்புப் […]

china ship fire 30kb

Source link