பாகு: ‘பிபா’ உலக கோப்பை (15 வயது) கால்பந்து லீக் போட்டியில் இந்திய அணி 2–1 என, கேமரூனை வென்றது.
அஜர்பெய்ஜானில், 15 வயதுக்கு உட்பட்டோருக்கான ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து முதல் சீசன் நடக்கிறது. இதில் 189 அணிகள், 32 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன. இந்திய அணி ‘கே’ பிரிவில் லாவோஸ், பஹ்ரைன், கேமரூன், செனகல், கிரெனடா அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.
முதல் போட்டியில் லாவோசை வீழ்த்திய இந்தியா, நேற்று நடந்த 2வது போட்டியில் கேமரூனை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 2–1 என்ற கோல் கணக்கில் தொடர்ச்சியாக 2வது வெற்றியை பதிவு செய்தது. இந்திய அணிக்கு லால்ரெம்ருவாட்பெலா (27வது நிமிடம்) ஒரு கோல் அடித்தார். கேமரூன் வீரர் முகமது சோஹில் கான் (20வது நிமிடம்) ஒரு ‘சேம்சைடு’ கோல் அடித்தார். கேமரூன் அணிக்கு பாரெய்ல் என்கோபோ (முதல் நிமிடம்) ஆறுதல் தந்தார்.
