ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்க நடிகர் தனுஷ் திட்டம்: அக்டோபர் 26-ல் சென்னையில் பிரம்மாண்ட சந்திப்பு

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், அண்மையில் தனது ‘தனுஷ் ரசிகர் மன்றத்தை’ ‘தனுஷ் நற்பணி இயக்கம்’ எனப் பெயர் மாற்றம் செய்து உறுப்பினர் சேர்க்கைப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து, கோவை, நெல்லை, மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள நற்பணி இயக்க நிர்வாகிகளை நேரில் சந்தித்து, உரையாடி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதுவரை 53 மாவட்டங்களில் 30 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளை அவர் சந்தித்துள்ளார்.

இந்த நிலையில், மீதமுள்ள 23 மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களைச் சென்னையில் நேரில் சந்திக்க நடிகர் தனுஷ் திட்டமிட்டுள்ளார். வரும் அக்டோபர் 26-ஆம் தேதி அல்லது இந்த மாத இறுதிக்குள் இந்த சந்திப்பை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சென்னை எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி கோரப்பட்டிருந்த நிலையில், அங்கே அன்றைய தினம் வேறு சில நிகழ்ச்சிகள் இருப்பதால் அரங்கம் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், நிகழ்ச்சியை நடத்துவதற்காகத் தகுந்த வேறு அரங்கத்தைத் தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

‘ஓம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு காரணமாகச் சில மாதங்களாகத் தள்ளிவைக்கப்பட்டிருந்த இந்த ரசிகர்கள் சந்திப்பு, தற்போது அக்டோபர் 26-ஆம் தேதி நடைபெற வாய்ப்புள்ளதாக மாநில நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இந்தச் சந்திப்பின்போது நடிகர் தனுஷ் முக்கிய அறிவிப்பு எதையேனும் வெளியிடுவாரா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Source link