“ரஜினியால் மட்டுமே முடியும்”  – வியந்து பாராட்டிய அல்லு அர்ஜூன்!

நெல்சன் – ரஜினிகாந்த் கூட்டணியில் கடந்த 15ஆம் தேதி வெளியான ‘ஜெயிலர் 2’ படம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி, எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, வித்யா பாலன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் விஜய் சேதுபதி, ஹிருத்திக் ரோஷன் உள்ளிட்டோரும் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். 

இப்படம் குடும்பங்கள் கொண்டாடும் வகையில் ஒரு கேங்க்ஸ்டர் படமாக அமைந்து வசூலையும் வாரி குவித்துள்ளது. முதல் வாரத்தில் உலகளவில் ரூ. 549 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. இதன் மூலம் முதல் வாரத்தில் அதிக வசூலை ஈட்டிய தமிழ் படமாக சாதனை படைத்துள்ளது. இந்த நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் இப்படத்தை பாராட்டியுள்ளார். 

அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ரஜினிகாந்தின் நட்சத்திர அந்தஸ்து, கம்பீரம் மற்றும் ஆளுமைக்கு ஒரு மிகச்சிறந்த உதாரணம். சட்டை கலையாமல் கூட ரூ.500 கோடி வசூலிக்கும் படத்தை அவரால் மட்டுமே கொடுக்க முடியும். விறுவிறுப்பான, அதிரடி நிறைந்த ஒரு கமர்ஷியல் என்டர்டெய்னர். அனிருத்… அசத்திவிட்டார். படத்தில் பணியாற்றிய அனைத்துக் கலைஞர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும், தயாரிப்பாளரும் தங்கள் முழு உழைப்பை கொடுத்துள்ளனர். இயக்குநர் நெல்சன் திலீப்குமார், மிகச் சிறந்ததொரு வெற்றிப் படத்தை அதிரடியாகக் கொடுத்துள்ளார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.  

#Jailer2 is 🔥🔥🔥

A true showcase of @rajinikanth sir’s star power, swag & aura! A Commercial Entertainer that keeps the adrenaline pumping!

Brother… @anirudhofficial KILLED IT! All the artists, technicians & the producer have poured their hearts into this film. The Showman… pic.twitter.com/DC9qal6KCV