இவ்வாறு நம் நாட்டில், இன்ஸ்டாகிராம் இளைஞர்களின் வாழ்வுடன் ஒன்றிப்போயுள்ளது. இதனைப் புரிந்து கொண்ட அரசியல் கட்சிகள், இளைஞர்களை கவர அல்லது அவர்களிடம் தங்களது அரசியலை கொண்டு செல்ல சமூக ஊடகங்கள் மிக முக்கியமானது என்பதை உணர்ந்துள்ளனர். அதனால், அரசியல் தலைவர்கள் தங்களது கவனத்தை இன்ஸ்டாகிராம் பக்கம் திரும்பியுள்ளனர்.
இன்ஸ்டாகிராமை பொறுத்தவரையில், பிரதமர் நரேந்திர மோடி 10 கோடி பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார். உள்துறை அமைச்சர் அமித்ஷா 3.22 கோடி பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார்.
அதே போல, எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி 1.47 கோடி, தமிழக முதல்வர் விஜய் 1.87 கோடி பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளனர். இந்நிலையில், தமிழக முதல்வர் விஜய், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை முந்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கெஜ்ரிவால் 40 லட்சம், பிரியங்கா காந்தி 40 லட்சம் மற்றும் மு.க.ஸ்டாலின் 23 லட்சம் பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளனர்.
