நீட் தேர்வு முறைகேட்டிற்கு தார்மீகப் பொறுப்பேற்று, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் பதவி விலகக் கோரி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற ஜனநாயகப் போராட்டத்தின் போது, ராகுல் காந்தியை கைது செய்த மத்திய பாஜக அரசின் ஜனநாயக மக்கள் விரோத நடவடிக்கையைக் கண்டித்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தாக்குதலில் நடத்திய சம்பவத்தை கண்டித்து சிதம்பரம் மேலவீதி, பெரியார் சிலை அருகில், கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி.பி.கே. சித்தார்த்தன் தலைமை வகித்து கண்டன உரையாற்றினார். நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் தில்லை ஆர். மக்கீன், மாவட்ட துணைத் தலைவர் ராஜாசம்பத் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் ஜெயச்சந்திரன், வட்டார தலைவர்கள் பகவத்சிங், செழியன், பார்த்தீபன், சசிகுமார, பழனிவேல், மாவட்ட பொதுச்செயலாளர் நெல்சன், சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலளர் ஷாஜகான், உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு ஒன்றியம் மோடி அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்.
